???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவு: ராகுல் காந்தி அறிவிப்பு 0 நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரம்: சி.பி.எஸ்.இ- உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு! 0 மாவட்டம்தோறும் ஐ.ஏ.எஸ்.அகாடமிகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு 0 மேட்டூர் அணையில் இருந்து ஜூலை 19-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 காவிரியில் வெள்ளப்பெருக்கு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்குகிறது 0 சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை: தமிழக முதலமைச்சர் அறிவிப்பு 0 பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் தற்காலிக பந்தல் சரிந்து விழுந்து விபத்து 0 கேரளாவில் தொடரும் கனமழை: எட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 0 எஸ்.பி.கே கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை 0 ரஜினி வேறு பிரபஞ்சத்தில் வாழ்ந்து வருகிறார்: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் 0 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி பேட்டி 0 இன்றைய ஆட்சியாளர்களிடம் எளிமையுமில்லை; தூய்மையுமில்லை: ப.சி. பேச்சு 0 கொல்லைப்புறம் வழியாக வந்தவர் டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமி தாக்கு! 0 உலகக் கோப்பையை வென்றது ஃபிரான்ஸ்! 0 ஒகேனக்கல்லில் அருவிகளை மூழ்கடிக்கும் வெள்ளம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐந்து மருத்துவமனைகள் அலைக்கழிப்பு; கேரளாவில் உயிரிழந்த தமிழர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   08 , 2017  03:59:52 IST


Andhimazhai Image
கேரள மாநிலம் கோட்டயத்தில் வசித்து வந்தவர் முருகன், வயது 46. பால்வியாபாரம் இவரது தொழில். தமிழர், நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இவர் இரவு பத்து மணிக்கு நண்பர் முத்து என்பவருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். இத்திக்கரா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலைச் சந்திப்பில் கார் ஒன்று மோதியதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் அவர்கள் இருவரையும்  கொல்லத்தில் இருக்கும்   கேஐஎம்எஸ்  மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றது. முத்துவுக்கு சிகிச்சை அளித்த அவர்கள் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் முருகனை வேறு ஒரு சிறந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் அறிவுறுத்தினார்கள்.  
 
உயிர்க்காக்கும் சிறப்பு ஆம்புலன்ஸ்  மூலமாக முருகன், மெடிட்ரினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் முருகனுக்கு சிகிச்சை அளிக்க, நரம்பியல் மருத்துவர் இல்லையென்று சொல்லி மருத்துவமனை நிர்வாகம் அவருக்குச் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டது. எனவே அவர் மறுபடியும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கும் அவர் செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் நரம்பியல் மருத்துவர் இல்லையென்று சொல்லி முருகனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டது மருத்துவமனை நிர்வாகம்.
 
பிறகு முருகன் எஸ்.யூ.டி என்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போதிய மருத்துவர்கள் இல்லையென்று சொல்லி சிகிச்சை அங்கும் அவருக்கு அளிக்கப்படவில்லை.  
 
மறுபடியும் முருகன் ஆம்புலன்ஸில் கொல்லத்திலிருக்கும் அஸீஸியா மற்றும் மெடிசிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கூட உறவினர்கள் யாரும் இல்லை என்று சொல்லி இரண்டு மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டன. ஆம்புலனஸ் பணியாளர்கள் தாங்களே கூட இருந்து பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லியும் இந்த மருத்துவனைகள் கைவிரித்துவிட்டன.
 
எட்டு மணி நேரம் கொல்லத்திற்கும், திருவனந்தபுரத்திற்கும் ஆம்புலன்ஸில் அலைக்கழிக்கப்பட்டு உயிருக்குப்போராடிய முருகன் கடைசியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
கேரள காவல்துறை தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் மருத்துவமனைகளின் அலட்சியத்தால் ஓர் உயிர் பலியாகிவிட்டது.
 
மருத்துவர்கள் இருக்கும் வரை மருத்துவம் உயிரோடிருக்கும். ஆனால் மருத்துவர்களின் மனிதாபிமானம்தான் செத்துவிட்டது. முருகனின் பரிதாப மரணம் இதைத்தான் நமக்கு உணர்த்தியிருக்கிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...