???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   21 , 2019  23:56:56 IST

எச்ஐவி பாதித்த தாயின் கருவிலிருந்து குழந்தைக்கு அந்நோய் பரவாமல் தடுப்பதில் உலகத்திலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எச்.ஐ.வி தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மாநில பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து அந்தந்த மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்.ஐ.வி பாதிப்பு தமிழகத்தில் கணிசமான அளவுக்கு குறைந்து இருப்பதாக தெரிவித்தார்.

”கருவில் இருக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு வராமல் இருக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உலகில் கியூபா நாட்டிற்கு பிறகு குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று வராமல் தடுப்பதில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது” என தெரிவித்தார்.

மேலும் அவர் 16 மாவட்டங்களில் இந்த பாதிப்பு முற்றிலும் இல்லை என்ற நிலை வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...