அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சொல்லி அடித்த கில்லி!

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   19 , 2021  17:35:08 IST


Andhimazhai Image

இஷான் கிஷான்… இருபத்து மூன்று வயதாகும் இந்த இளைஞனுக்கு அதுதான் முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி. முதல் பந்து வீசப்படுகிறது.  கிரிக்கெட்  விளையாடும் யாருக்கும் சரி பொறுத்து, பார்த்து ஆடுவோம் என்றுதான் இருக்கும். இஷான் முதல் பந்தையே சிக்ஸருக்குத் தூக்கினார்.

தற்போது இலங்கையில் நடந்துவரும் இந்தியா -இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில்தான் இந்த சம்பவம். ஆட்டத்தில் இஷான் அரை சதம் அடித்தார். டி20  மற்றும் ஒருநாள் போட்டி – இரண்டிலும் அறிமுகமான முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்த பெருமைக்கு சொந்தக் காரர் ஆகி இருக்கும் இஷானுக்கு அன்றுதான் பிறந்த நாளும் கூட.

முதல் பந்திலேயே சிக்ஸர்?

“இன்று என் பிறந்த நாள். பந்து நன்றாக மேல் எழும்பி வரும் பிட்ச் ஆக அது இருந்தது. எனவே நான் எல்லோரிடமும் சொல்லிவிட்டேன், உள்ளே போனதும் முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்புவேன் என்று… சொன்ன மாதிரி செய்ய முடிந்தது!” என்று சொல்கிறார் இஷான் கிஷான்.

ஜூலை 18 இஷானின் பிறந்த நாள். டபிள்யூ ஜி கிரேஸ், டென்னிஸ் லில்லி ஆகிய கிரிக்கெட் ஜாம்பவான்களில் பிறந்த நாளும் இதுதான்.

இஷான் ஜார்க்கண்ட் அணிக்காக கிரிக்கெட் விளையாடுகிறவர். விக்கெட் கீப்பரும் கூட. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் ஆடுகிறவர்.

ஜார்க்கண்ட்.. விக்கெட் கீப்பர் என்றதும் யார் பெயரோ ஞாபகம் வருகிறதா? ஓகே.. இஷான் கிஷான் மேலும் ஜொலிக்க வாழ்த்துகள்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...