???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: நடிகர் சூர்யா அறிக்கை 0 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு 0 விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி! 0 கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு! 0 பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! 0 தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை 0 தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு! 0 நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொலைப்பட்டியலில் ரவிக்குமாரின் பெயர் - உறுதி செய்தது கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   31 , 2018  22:44:25 IST


Andhimazhai Image
பத்திரிகையாளரும் செயல்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமோல் காலே என்ற பயங்கரவாதியை கர்நாடக மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அவர்களால் கொலை செய்யப்படவேண்டுமென 34 பேரின் பெயர்கள் குறித்து வைக்கப்பட்டுள்ளன. அதில் 8 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள 26 பேர் இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்த பகுத்தறிவாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் எனவும் , அதில் விசிக பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமாரின் பெயர் இடம்பெற்றிருப்பதாகவும்  தி நியூஸ் மினிட் என்ற செய்தித் தளத்தின் நிருபரிடம் கர்நாடக சிறப்புப் புலனாய்வு குழு உறுதிப்படுத்தியுள்ளது. 
 
இந்த இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், கர்நாடக சிறப்புப் புலனாய்வு குழு அளித்த தகவலின் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசிடன் தகுந்த பாதுகாப்பு வழங்க கோரி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் கொள்கை ரீதியாகவே எப்போதும் விமர்சித்து வருவதாகவும் அவதூறான வகையில் மனம்புண்படும்படியான கருத்துக்களை எப்போதும் கூறியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாற்றுக்கருத்துகள் இருந்தபோதும் பாஜகவுடன் நட்புணர்வை பேணுவதாகவும் தெரிவித்திருக்கும் அவர், ஆனாலும் தான் பயம் கொள்ளவில்லை என்கிறார்.
 
மேலதிக செய்திகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம்:

https://www.thenewsminute.com/article/vck-other-parties-seek-security-writer-ravikumar-after-name-appears-hit-list-87535click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...