???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் 0 கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு 0 தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் 0 பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆசிரியர் வருகைப் பதிவு கருவிகளில் தமிழுக்கு பதிலாக இந்தி திணிப்பு: கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

Posted : சனிக்கிழமை,   ஜுலை   20 , 2019  02:40:57 IST


Andhimazhai Image

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் வருகைப் பதிவு கருவியில் தமிழுக்குப் பதிலாக இந்தி மொழி மாற்றம் செய்யப்பட்டதற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை:

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் முறைக்குப் பதிலாக 2019 ஜனவரி முதல் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

 

Bio-Metric Device-ல் ஆசிரியர்கள், ஆசிரியர்களல்லாத பணியாளர்கள் சார்ந்த விவரங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது தமிழை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ஹிந்தி மொழியில் பதிவேற்றங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் துறைகளிலும் மத்திய பாஜக அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தி திணிக்கப்படுவதென்பது தொடர்கிறது. இதுபற்றி தட்டி கேட்க வேண்டிய அதிமுக அரசும் வாயை மூடிக் கொண்டு, கண்டும், காணாமலும் இருந்து வருவது நியாயமற்றது.

 

எனவே, ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் உள்ள பயோ மெட்ரிக் முறையில் இந்தி மொழியை நீக்கி தமிழ் மொழியை மீண்டும் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

 

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...