???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

8-ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமா? மத்திய அமைச்சர் விளக்கம்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   10 , 2019  21:57:11 IST

இந்தியக் கல்விமுறையில் மாற்றம் கொண்டு வருவதற்காக புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவில், கல்வியியலாளர் வசுதா காமத், மத்திய இணையமைச்சர் அல்போன்ஸ், பல்கலைக்கழக பேராசிரியர் மஞ்சுள் பார்கவா உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றிருந்தனர்.
 
அந்தக் குழவின் பதவிக்காலம் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனையடுத்து, டிசம்பர் 31-ம் தேதி, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுக்குழு அறிக்கை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
 
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த பிரகாஷ் ஜவடேகர், ‘புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுக்குழு அறிக்கையில், எந்த மொழியையும் கட்டாயப்படுத்தவேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை.
 
இந்த அறிக்கை குறித்து தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால், இதுகுறித்து விளக்கமளிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...