???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி 0 கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி கிணற்றில் இறங்கியுள்ளார்: டிடிவி தினகரன் 0 காலியானதாக அறிவிக்கப்பட்டது ஒசூர் தொகுதி 0 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவு 0 விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரித்தார் பியூஷ் கோயல் 0 உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை! 0 அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 0 அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி:மு.க.ஸ்டாலின் 0 பாஜக தலைவர் அமித் ஷா வருகை திடீர் ரத்து! 0 செயல்பாட்டாளர் முகிலன் மாயம்: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு 0 திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை 0 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை 0 ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராவதில் மீண்டும் விலக்கு கேட்டார் ஓ.பி.எஸ்.! 0 அமித்ஷா இன்று சென்னை வருகை! 0 பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீட்கத் தீவிரமாக முயல்கிறோம்: தொலைத்தொடர்பு அமைச்சகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நெடுஞ்சாலை டெண்டர் விவகாரத்தில் முதலமைச்சரை விசாரிக்க அவசியம் இல்லை: லஞ்ச ஒழிப்புத் துறை

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   09 , 2018  18:38:08 IST

தமிழகத்தில் 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை துறை டெண்டர்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகார் குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சரிடம் விசாரணை நடத்துவதற்கான அவசியம் இல்லை என தெரிவித்தது.
 
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை நியமிப்பது யார் என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழு இயக்குநரை நியமிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...