அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தனியார் பேருந்துகளில் கட்டண கொள்ளை: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வேண்டுகோள்!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   12 , 2021  16:07:54 IST

தமிழக அரசு, தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டண உயர்வை தடுத்து நிறுத்துவதோடு, நியாயமான கட்டணம் வசூலிக்கப்படுதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் பண்டிகைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களைக் கொண்ட பண்டிகை ஆயுத பூஜை. அதுவும் இந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் வியாழக்கிழமை அன்று ஆயுத பூஜை என்பதாலும், அக்டோபர் 15-ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி என்பதாலும், இதற்கு அடுத்த நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதாலும், 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மிலாதுன் நபி பண்டிகை என்பதாலும், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.



மேற்படி பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறையினை முன்னிட்டு, வெளியூர்களில், குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிபவர்கள் கிராமங்களை நோக்கி செல்வதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். இதனை முன்னிட்டு, பயணிகள் நெரிசலின்றி பயணிக்க ஏதுவாக, வெவ்வேறு பகுதிகளுக்கு தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கூடுதலாக 3,000 பேருந்துகள் இயக்க இருப்பதாகவும், தேவைப்படின் கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதேபோன்று, தனியார் நிறுவனங்களும் பேருந்துகளை வெவ்வேறு வழித்தடங்களில் இயக்குகின்றன. இவ்வாறு தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் பேருந்துகளில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், குறிப்பாக குளிர்சாதன வசதியுடன் கூடிய சென்னை-கோயம்புத்தூர் வழித்தடத்திற்கான கட்டணம் 2,800 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், கிட்டத்தட்ட 1,500 பேருந்துகள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படுவதாகவும், சென்னை-கோயம்புத்தூர் விமானக் கட்டணம் 3,100 என்றிருக்கின்ற நிலையில், பேருந்துக் கட்டணம் 2,800 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது என்றும், விமானக் கட்டணத்திற்கும் தனியார் பேருந்துக் கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசம் வெறும் 300 ரூபாய் என்றும், அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும், விதி மீறல்கள் தொடர்ந்து நடப்பதாகவும், அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தே இது நடப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிப்பதாக இன்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.



பண்டிகைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே இந்த நிலை என்றால், பண்டிகைக்கு முன் தினம் நிலைமை எப்படி இருக்கும் என்பதை யூகித்துப் பார்க்கவே முடியாது என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். போக்குவரத்து நெரிசலுக்கிடையில் பத்து மணி நேரம், பன்னிரண்டு மணி நேரம் பயணித்து செல்லக்கூடிய பேருந்துகளில் விமானப் பயணத்திற்கு இணையான கட்டணம் வசூலிப்பது என்பதும், சம்பிரதாயத்திற்காக எச்சரிக்கை விடுத்துவிட்டு, இதனை அரசு கண்டும், காணாமல் இருப்பது என்பதும் கண்டிக்கத்தக்கது. இதில் ஆளும் கட்சியினருக்கும், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இரகசியத் தொடர்பு இருக்கிறதோ என்று பொதுமக்கள் எண்ணக்கூடிய அளவிற்கு கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.



எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டண உயர்வை தடுத்து நிறுத்துவதோடு, நியாயமான கட்டணம் வசூலிக்கப்படுதற்கு வழிவகை செய்ய காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...