???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்! மோடி வேண்டுகோள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்! 0 அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா! 0 ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 0 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி 0 நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு! 0 கொரோனா பயத்தால் சாத்தூரில் ஒருவர் உயிரிழப்பு 0 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தரமான சம்பவம்! - 'ஹீரோ' விமர்சனம்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   20 , 2019  05:50:13 IST


Andhimazhai Image
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஊழியர்களை உருவாக்கும் கல்விமுறையை மறுத்து, மாணவர்களின் தனித்திறனை அங்கீகரிக்க வலியுறுத்தும் கருத்தாக்கத்தை பிரமாதமான திரைஅம்சங்களை கொண்டு சொல்லியிருக்கும் படம் 'ஹீரோ'.
 
சென்னையில் போலி சான்றிதழ்களை உருவாக்கி அதன் மூலம் பலருக்கு உதவுவதுடன், சம்பாதிக்கவும் செய்கிறார் சிவகார்த்திகேயன். சிறிய வயது முதல் சக்திமானைப்போல் சூப்பர் மேன் ஆக துடிக்கும் சிவகார்த்திகேயன் சூழ்நிலையால் இந்த வேலையை செய்து வருகிறார். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கமிஷனுக்காக மாணவர்களை சேர்த்துவிடும் வேலையையும் செய்யும் அவரால், தனது வீட்டருகில் இருக்கும் மதி எனும் சிறுமிக்கு ஏரோனாட்டிகல் என்ஜினீயரிங் சீட் வாங்க முடியாமல் போகிறது. மதி அர்ஜுன் நடத்தும் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் சிறப்பு பள்ளியின் மாணவி. அர்ஜுனின் பேச்சை மீறி மதியை கல்லூரியில் சேர்க்க சிவகார்த்திகேயன் தன்னிச்சையாக எடுத்த முடிவு விபரீதத்தில் முடிகிறது.
 
அதன் மூலம் மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை அழித்து, கல்வி வியாபாரம் செய்துகொண்டிருக்கும் அபய் தியோலின் அயோக்கியத்தனத்தை அறிகிறார் சிவகார்த்திகேயன். இதன் பிறகு மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை வெளிக்கொண்டுவர சூப்பர்ஹீரோ அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன் அதனை எப்படி நிகழ்த்தினார் என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறது இப்படம்.
 
முதல்பாதி வரை கதைக்கும் - அர்ஜூனுக்கும் இருக்கும் முக்கியத்துவத்தில் சற்று பின்தங்கி தெரியும் சிவகார்த்திகேயன், இரண்டாம் பாதியில் ரசிகர்களை நரம்பு புடைக்க எழுந்து குரல்கொடுக்க செய்கிறார். கல்வி வியாபாரம், மாணவர்களின் கண்டுபிடிப்பு, விஞ்ஞான திறனை ஊக்குவிக்காத கல்வி முறை, அது ஏற்படுத்தும் சமூக விளைவுகள், இந்த கட்டமைப்பை உடையாமல் பார்த்துக்கொள்ளும் வியாபாரிகள் என ஒரு வலுவான பிரச்சனையை எடுத்து கையாண்டிருக்கிறார் பி.எஸ். மித்ரன். இவற்றை நேர்த்தியான திரைக்கதையில் சேர்த்து, சிறப்பாக உருவாக்கியதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
 
தமிழ் சினிமாவின் தற்போதைய போக்கு என்பது, சமூகத்தின் ஏதேனும் சிக்கலை எடுத்து, அதனை வெகுஜன வடிவத்தில் படைக்கும் ஒரு வழக்கத்தை கொண்டிருக்கிறது. இதில் பல படங்கள் வடிவ நேர்த்தியில் தடுமாறினாலும், சமூக அக்கறையை முன்னிலை படுத்துபவையாக வருவது உண்மையில் சாதகமான விஷயமாக தெரிகிறது. அரசியல் போதாமை இருந்தாலும்கூட விவசாயம், அரசியல் கட்சி விமர்சனம், கல்வி, ஊழல், சமத்துவம் போன்ற கருபொருள் இல்லாமல் தமிழில் இப்போது எந்த பெரிய ஹீரோ படங்களும் வருவதில்லை.
 
இந்த வரிசையில் வந்திருக்கும் ஹீரோ வெகுஜன சினிமா மொழியில் கல்வி வியாபாரத்தையும், கற்பித்தல் முறை குறித்தும் வலுவான தாக்கத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு திரைக்கதை, உருவாக்கம், சுவாரஸ்யம் என எதிலும் குறைவைக்காத தரமான சம்பவமாக இருக்கிறது ஹீரோ.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...