???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம்! 0 நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து! 0 லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்! 0 பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம்! 0 நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி 0 நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் 0 CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் 0 பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை! 0 விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு 0 மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 0 சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் 0 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் 0 பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு 0 புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெள்ளத்தால் மிதக்கும் மும்பை நகரம்: கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   10 , 2018  23:01:57 IST

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மும்பையில் கடந்த 4 நாட்களாக கனமழை இடையறாது பெய்து வருகிறது.  கடும் மழை பொழிந்து கொண்டே இருப்பதால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. பொதுமக்கள் முழங்கால் அளவு நீரில் நடந்து சென்றனர். தண்ட வாளங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் வாசை - விரார் இடையிலான ரயில் இன்று ரத்து செய்யப்பட்டதாக மேற்கு ரயில்வே தெரிவித்தது.
 
கடற்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் மீட்புப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
 
நேற்று ஒரு நாள் மட்டும் தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்யும் சராசரி மழை அளவை விட ஐந்து மடங்கு மழையை மும்பை பெற்றதாக வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மும்பை, தானே, பால்கர் உள்ளிட்ட இடங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...