அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   03 , 2022  10:27:14 IST

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
தமிழகம், , கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  தமிழகத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  மழை காரணமாக . நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும், கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தொடர் மழை காரணமாக முக்கிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால், நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 16 அடியும் உயர்ந்துள்ளது. மணி முத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
 
கேரளாவில் கனமழை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.  கடலோர மற்றும் உட்புற கர்நாடக பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...