அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சென்னையில் கொட்டும் கனமழை தொடரும்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   06 , 2021  09:42:27 IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் இடியுடன் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்தது. இந்நிலையில் நகரின் மையப்பகுதியான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
 
சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. தற்போது தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பொய்து வருவதால் ஜிஎஸ்டி சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் முகப்பு விலங்குகள் எரியவிட்டபடி வாகனத்தில் ஓட்டி செல்கின்றனர். தெடர் கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி வருகிறது.வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்
 
தொடர்ந்து தென்கிழக்கு பகுதியிலிருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று சென்னை நோக்கி நகருவதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்.   சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெருமபாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...