தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்கியுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 13 மாவட்டங்களில் அனல்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஃபோனி புயலால் தமிழகத்தில் வெப்பம் தணியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயல் ஒடிசாவில் கரையை கடந்ததால் இங்குள்ள ஈரப்பதத்தையும் இழுத்துச் சென்றது.
இதனால் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று முதல் கத்தரி வெயில் தொடங்கியுள்ளது. கத்தரி வெயில் வரும் 29-ம் தேதி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.
வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.