???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுலை   14 , 2019  22:15:54 IST

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நீதித் துறையில் சிறப்பாக பணியாற்றிய நீதியரசர்கள் 3 பேருக்கு " சட்டவியல் முனைவர்" பட்டம் வழங்கி கவுரவித்தார்.

கேரள ஆளுநரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சதாசிவம், உச்ச நீதிமன்ற நீதிபதி ஷரத் அரவிந்த் போப்டே மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, ஆகியோர் பட்டம் பெற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ”சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீதிக்காக தலைவணங்கிய எண்ணற்ற மன்னர்கள் ஆண்டது தமிழ்நாடு என பெருமிதம் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...