அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக! 0 ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக்! 0 கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு! 0 இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு! 0 பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்! 0 போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! 0 திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் 0 புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்! 0 பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா! 0 கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்! 0 தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்! 0  தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் 0 தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு 0 காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? திருநாவுக்கரசர் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தடாகம் மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   07 , 2021  11:45:36 IST

கோவை தடாகம் மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மலை பகுதி பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 200 செங்கல் சூளைகளை மூடக் கோரி சின்ன தடாகத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும், யானைகள் நல ஆர்வலரான முரளிதரனும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
 
அவர்கள் தங்கள் மனுக்களில், கோவை மாவட்டத்தில் உள்ள சின்ன தடாகம், நஞ்சுண்டபுரம், வீரபாண்டி, சோமயம்பாளையம், பண்ணிமடை ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.
 
இந்த செங்கற் சூளைகளால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், நில வளத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், செங்கல் சூளைகளையும் அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.மேலும், அதுகுறித்த அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்யும்படி தலைமை வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...