செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
யூடியூபை ஏன் தடை செய்யக் கூடாது? நீதிமன்றம் கேள்வி
சாட்டை துரைமுருகன் யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்ததால் கைது…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
யூடியூபை ஏன் தடை செய்யக் கூடாது? நீதிமன்றம் கேள்வி
Posted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 21 , 2022 08:12:03 IST
சாட்டை துரைமுருகன் யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்ததால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சாட்டை துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவுபடி , இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் கொடுத்து நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் சாட்டை துரைமுருகன் மீண்டும் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசி வருகிறார். இதன்பேரில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவருக்கு நிபந்தனையுடன் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதி புகழேந்தி, அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சாட்டை துரைமுருகன் என்ன தொழில் செய்கிறார்? யூடுயூபில் இதுபோன்ற செய்திகள் வெளியிடுவதன் மூலம் அவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் , என உத்தரவிட்டார்.
|