???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி

Posted : சனிக்கிழமை,   மே   18 , 2019  01:26:13 IST

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் திருட்டை தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளில் நிலத்தடி நீர் தனியாரால் திருடப்படுவதாக தனியார் தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டுள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன், எதிர்பாராத விதமாக தண்ணீர்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நிலத்தடி நீர் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார். சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து வணிக ரீதியாக விற்பனை செய்பவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்த தப்பித்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

சட்டவிரோத நிலத்தடி நீர் விற்பனையை அரசு தடுக்காதது அரசியலமைப்புக்கு விரோதமானது மட்டுமல்ல, அரசியலமைப்பு அடிப்படைவசதிகளை அரசு செய்ய தவறியுள்ளதாக கூறினார். மேலும், நிலத்தடி நீரை எடுப்பதை ஒழுங்குபடுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? - சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? - ஏரிகள், விவசாய நிலங்கள், நீர் ஆதாரங்களிலிருந்து நிலத்தடி நீரை எடுப்பது தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என சரமாரி கேள்விகளை நீதிபதி எழுப்பினார். வரும் திங்கட்கிழமை தமிழக அரசு உரிய பதிலளிக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...