???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம்

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   09 , 2020  22:15:59 IST

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், சித்த மருந்துகளை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன. கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்ததாக கூறினால், அதனை சந்தேகிப்பது ஏன்? தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?

நமது மருத்தவர்களுக்கு கட்டமைப்பு மற்றும் பண உதவி செய்து அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் கூறி உள்ளனர்?எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்தற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன?

எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவு பிறப்பித்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...