???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சரோஜ்கான் - நடன ராணி! 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   21 , 2019  23:27:23 IST

மதுரையை சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் " தமிழகம் முழுவதும் டெங்கு ,சிக்குன் குன்யா காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதனை தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறியிருந்தார். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைத்து சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவானது நீதிபதிகள் சிவஞானம் மற்றும் தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், உள்ளாட்சி துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், போதிய முகாந்திரம் இல்லாமல் பொது நல மனு தாக்கல் செய்யக்கூடாது என்று கண்டனம் தெரிவித்ததோடு நகராட்சி, உள்ளாட்சி துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டால் டெங்கு கொசு உற்பத்தியாவதையும், டெங்கு காய்ச்சலையும் கட்டுப்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தினர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...