???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பில்ரோத் மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம்

Posted : புதன்கிழமை,   மே   29 , 2019  00:14:55 IST

சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமையில், அனுமதியின்றி கட்டப்பட்ட 5 மாடிகளுக்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், 2006-ம் ஆண்டுக்கு முன்பே கட்டப்பட்ட 5 மாடிகளையும் வரைமுறைப்படுத்த அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட கோரி பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெகநாதன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

வரைமுறை செய்ய கோரிய மனு குறித்து முடிவெடுக்கும் முன்பே, மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

பொது மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்கி வரும் தங்கள் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பது, மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பத்தும் என்றும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள தளங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் சிகிச்சை பெறுவோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் டீக்காராமன் மற்றும் ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, வரைமுறைப்படுத்தக் கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் பரிசீலனையில் உள்ளதாகவும், நீதிமன்ற அனுமதியின்றி எந்த இறுதி முடிவும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுத்தரப்பின் இந்த வாதத்தை அடுத்து, இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை தெரிவித்த நீதிபதிகள், வரைமுறைப்படுத்த கோரி விண்ணப்பித்திருந்தாலும், விதிமீறல் கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறி பில்ரோத் மருத்துவமனையின் மனுவை முடித்து வைத்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...