???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   11 , 2019  23:25:27 IST

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 6-ம்தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர். 
 
இதன் தொடர்ச்சியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் ஜெயலலிதாவின் நண்பர்கள், உறவினர்கள், சிகிச்சை அளித்தவர்கள், உடன் இருந்தவர்கள் என பலரும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் , அப்போலோ மருத்துவர்களை விசாரணைக்கு அழைப்படுகின்றனர். ஆனால் விசாரணை ஆணையத்தில் மருத்துவ அதிகாரிகள் யாரும் இல்லாததால், தங்களது மருத்துவர்கள் அளிக்கும் தகவல்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 
 
இதனை குறிப்பிட்டு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அப்போலோ நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...