![]() |
ஹரியானா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்புPosted : திங்கட்கிழமை, நவம்பர் 04 , 2019 02:05:29 IST
ஹரியானாவில் 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று 5 வயது சிறுமி 50 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு மீட்கும் பணி தொடங்கியது.
பொக்லைன் இயந்திரம் மூலம் 50 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டு பக்கவாட்டில் குழி தோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.
மருத்துவக்குழுவினர் குழந்தைக்கு ஆக்சிஜன் தொடர்ந்து கொடுத்துவந்தனர். பெற்றோரின் குரல் ஆடியோ பதிவு செய்யப்பட்டு குழந்தைக்கு கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் குழந்தை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
|
|