![]() |
ஹாப்பி பர்த்டே ராஷ்மிகா மந்தனா!Posted : திங்கட்கிழமை, ஏப்ரல் 05 , 2021 12:59:29 IST
சுல்தான் திரைப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் 25-வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
1996ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டில் பிறந்த நடிகை ராஷ்மிகா கல்லூரியில் படிக்கும் போதே பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து கன்னட திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவுடன் கீதம் கோவிந்தம் படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய பிரபலமானார். தற்போது, சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்துள்ள ராஷ்மிகா தமிழ்,தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழி படங்களில் பிஸியாகா நடித்து வருகிறார். இந்நிலையில், ராஷ்மிகா இன்று தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்கள் இவருக்கு காமன் டிவி வெளியிட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.
|
|