???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான் 0 இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஐ தாண்டியது! 0 சென்னை பீனிக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல் 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கை கொடுக்கும் கை!

Posted : சனிக்கிழமை,   மார்ச்   07 , 2020  02:41:06 IST


Andhimazhai Image

மனிதர்கள் உடல் உறுப்புகளை விபத்துகளில் இழக்கிறார்கள். ஆனால் அவற்றைத் திரும்பப் பெறுவது என்பது மிக அரிது. இப்போது  உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் இரு கைகளையும் இழந்த ஸ்ரேயா என்னும் 21 வயதுப் பெண்ணின் கதை மிக அபூர்வமானது. அவருக்கு ஓர் ஆணின் கரங்கள் பொருத்தப்பட்டன.

 

ஆசியாவில் இப்படி மாறுபட்ட பாலின மாற்று கரங்கள் அறுவை சிகிச்சை நடந்தது இதுதான் முதல்முறை. 2017-ல் இந்த சிகிச்சை நடந்தது. ஆச்சரியமான விஷயம், ஸ்ரேயாவின் உடல் தோல் நிறத்துக்கே இந்த புதிய கரங்களின் தோல் நிறமும் மாறிவிட்டது. அத்துடன் தன் பழைய கையெழுத்தைப் போலவே இப்போது அவரால் எழுதவும் முடிகிறது.

 

புனேவில் வசித்து வரும் ஸ்ரேயா, கர்நாடகாவில் உள்ள மனிப்பால் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு புனேவிருந்து பல்கலைகழகத்திற்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் தனது இரு கைகளை இழந்தார்.

 

இதைத்தொடர்ந்து அவர் கை மாற்று அறுவை சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள கொச்சியில் இருக்கும் அம்ரிதா மருத்துவமனையை 2016-ல் அனுகினார். இதைத் தொடர்ந்து 2017-ல் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஓர் இளைஞரின் கைகள் இவருக்குப் பொருந்து நிலையில் இருந்தன.

 

இந்த மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சை பல நடந்துள்ளது என்றாலும் ஒரு ஆணின் கைகளை பெண்ணுக்கு பொருத்தும்  அறுவை சிகிச்சை நடந்தது இதுதான் முதல் முறை. சுமார் 13 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 

அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர் குழுவில் இருந்த  டாக்டர் மோஹித் ஷர்மா கூறுகையில் ‘ ஒரு ஆண் கைகளை பெண் உடலுக்கு பொருத்துவது இதுவரை வெளிநாடுகளில்தான் நடந்துள்ளது.  இந்தியாவில் இது முதல் முறை என்பதால் பின்விளைவுகள் என்ன ஏற்படும் என்பதை முன்பே கண்டறிய முடியவில்லை.  ஸ்ரேயா விஷயத்தில் எதிர்பாராத பல விஷயங்கள் நடந்துள்ளது. பொருத்தப்பட்ட கைகளுக்கும்  ஸ்ரேவின் உடலுக்குமான திரவங்களின் போக்குவரத்து சுமார் ஒரு வருடத்தில் தொடங்கிவிட்டது. பொருத்தப்பட்ட கை முதலில் அதிக எடையில் இருந்தது. நாட்கள் செல்ல, ஸ்ரேயாவின் உடல்  எடைக்கு ஏற்ப கைகளின் எடை குறைந்துவிட்டது.  இதுமட்டுமில்லாமல் பொருத்தப்பட்ட கைகள் கருப்பு நிறத்தில் இருந்தன. ஆனால் தற்போது ஸ்ரேயாவின் நிறத்திற்கு ஏற்பட நிறம் மாறியிருக்கிறது. கை மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு இதுபோன்று நிறம் மாறும் விளைவு ஏற்பட்டதில்லை’. என்றார்.

 

ஸ்ரேயாவின் வாழ்வில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய கைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் .  எர்ணாகுளத்தில் உள்ள கல்லூரியில் பி. காம் படித்து வந்த இவர்,   இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்தார்.  இதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் கொடுக்க அவரது பெற்றோர் முன்வந்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரேயாவுக்கு புதுவாழ்வுகிட்டியது.

 

கைகள் நிறம் மாறுவது தொடர்பாக  தகுந்த ஆராய்ச்சி செய்தால்தான், ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்பதை கண்டறிய முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

இந்நிலையில் பொறியியல் மாணவியான ஸ்ரேயா, அதைக் கைவிட்டு பொருளாதாரத்தில் பிஏ சேர்ந்தார்.   தனது புதிய கைகளுடன்   அந்த கல்லூரி தேர்வை எழுதியும் முடித்திருக்கிறார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...