???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன் 0 தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு 0 குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி 0 அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா?: அமைச்சர் ஜெயக்குமார் 0 எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா 0 கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி! 0 திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் 0 கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! 0 நாடக இயக்குநர் அல்காசி மரணம்! 0 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 0 தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு 0 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு 0 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் 0 ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுலை   14 , 2019  22:25:32 IST

அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா “ புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்கள் பேசாதது வருத்தமளிக்கிறது. அதேபோல் குறைவான ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்ட பள்ளிகளை மூடும் முடிவும் சரியல்ல. பள்ளிகளின் தரத்தை உயர்த்தமால் பள்ளிகளை மூடினால், கிராமப்புற மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்காமல், நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது ஏன்..? “ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ புதிய தேசிய கொள்கை குறித்து சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தேசியக் கொள்கையின் 400 பக்க வரைவு அறிக்கையை அவர் படித்தாரா என்பது தெரியவில்லை. அதனை முழுமையாக படித்துவிட்டு சூர்யா பேசினால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...