???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குட்கா ரெய்டுகள்: இந்த நிகழ்வு தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது! முக ஸ்டாலின் அறிக்கை!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   05 , 2018  05:54:35 IST


Andhimazhai Image



குட்கா ஊழல் தொடர்பாக இன்று சிபிஐ தமிழக சுகாதார அமைச்சர், டிஜிபி, முன்னாள் சென்னை மாநகர் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் இல்லங்கள் உட்பட 40 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இதை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் விடுத்த அறிக்கை:


தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர், முன்னாள் சென்னை மாநகர ஆணையர் திரு ஜார்ஜ், தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரு டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட குட்கா ஊழல் டைரியில் இடம் பெற்றுள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் இல்லங்களிலும், சி.பி.ஐ ரெய்டு நடத்தியிருப்பதை வரவேற்கிறேன்.

குட்கா ஊழலை மறைக்க, அதிமுகவின் மூன்று முதலமைச்சர்களும், இரு தலைமைச் செயலாளர்களும், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகளும் எவ்வளவோ முயன்றும், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் இன்றைக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, இப்போது அதிரடியாக 40 க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டுகள் நடைபெற்றுள்ளன என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தேதி வாரியாக குட்கா குடோன் அதிபரிடமிருந்து மாமூல் பெற்ற போலீஸ் அதிகாரிகளையும், அமைச்சர் திரு விஜயபாஸ்கரையும் காப்பாற்றுவதற்காக, வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் பற்றி விசாரிக்க நினைத்த டி.ஜி.பி. திரு அசோக்குமாரை இரவோடு இரவாக பதவி விலக வைத்து, ஆட்சியினர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார்கள்.

அந்தக் கடிதத்தை காணாமல் அடித்த தலைமைச் செயலாளர் திரு ராம்மோகன்ராவை, வெட்கம் ஏதுமின்றிக் காப்பாற்றினார்கள். பிறகு, அந்த வருமான வரித்துறையின் கடிதம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று, தலைமைச் செயலாளார் திருமதி கிரிஜா வைத்தியநாதன் அவர்களே உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் அவலம் அரங்கேறியது.

அதையும் மீறி, மதுரை உயர்நீதிமன்றக் கிளை “குட்கா விசாரணைக்கு”உத்தரவிட்டு, “சுதந்திரமான விஜிலென்ஸ் கமிஷனரை நியமிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. இந்த விசாரணை, அமைச்சரையும் - டி.ஜி.பி.க்களையும் நெருங்கி விடுமோ என்று கருதி, விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்ட திரு வி.கே.ஜெயக்கொடி அவர்களையும், அவர் நேர்மையானவர் என்பதால் மாற்றினார்கள்.

வருமான வரித்துறை கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அமைச்சர் திரு விஜயபாஸ்கர், டி.ஜி.பி.க்கள் ஆகியோரைக் காப்பாற்றுவதற்காக, குட்கா ஊழல் டைரியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சென்னை மாநகர காவல் ஆணையரான திரு ஜார்ஜ் மூலமாகவே “கீழ் நிலை காவல்துறை அதிகாரிகளை மட்டும் குட்கா ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டி” ஒரு கடிதம் எழுத வைத்தார்கள்.

வருமான வரித்துறை கடிதத்தை காணாமல் அடித்து விட்டு, ஆணையராக இருந்த திரு ஜார்ஜின் கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த லஞ்ச ஊழல் தடுப்புத் துறை“ அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பிக்கள் ஆகியோரின்” பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் உள்நோக்கத்துடன், சேர்க்கவில்லை.

பிறகு நடைபெற்ற விசாரணையில் டி.ஜி.பி.க்கள் மற்றும் அமைச்சர் பெயரை சேர்க்க வேண்டும் என்ற நெருக்கடி உருவான போது, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை இயக்குனராக இருந்த திரு மஞ்சுநாதா என்ற கூடுதல் டி.ஜி.பி.யை அங்கிருந்து தூக்கியடித்தார்கள். குட்கா ஊழல் வழக்கை திசைதிருப்ப, குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க , தற்போது முதலமைச்சராக இருக்கும் திரு எடப்பாடி பழனிசாமி எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டார்.

இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து சுகாதாரத்துறையில் உள்ள ஒரு கடை நிலை ஊழியரை வைத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தடுப்பதற்கு முதலமைச்சர் துணை போனார்.

ஆனால், அந்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்ததால், இப்போது சி.பி.ஐ., குட்கா வழக்கில் குட்கா குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்டவர்களை விசாரித்துள்ளது. அதில் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் மீதும், சுகாதாரத்துறை அமைச்சர் மீதும் ரெய்டு நடத்தியிருக்கிறது. ஆகவே, குட்கா அதிபரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், ஆரம்பகட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் இந்த சி.பி.ஐ. ரெய்டு நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர், அப்போது சென்னை மாநகர ஆணையராக இருந்த திரு ஜார்ஜ், இப்போது டி.ஜி.பி.யாக இருக்கும் திரு டி.கே. ராஜேந்திரன் ஆகியோரின் மீது குட்கா டைரி, குட்கோ குடோன் அதிபர் வாக்குமூலம் மற்றும் தற்போதையை சி.பி.ஐ. ரெய்டு மூலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஊழலுக்கான ஆரம்பகட்ட ஆதாரம் வெளிவந்துள்ளது. குட்கா ஊழல் புரிந்ததற்காக ரெய்டு செய்யப்பட்டுள்ள அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அமைச்சரவையிலும், திரு டி.கே. ராஜேந்திரன் புகழ்மிக்க தமிழக காவல்துறையின் தலைவராகவும் இனியும் நீடிப்பதும் ஒரு நிமிடம் நீடித்தாலும் அது மக்களாட்சித் தத்துவத்திற்கும், நேர்மை -நியாயத்திற்கும், காவல்துறை நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய இழுக்காகவும், துடைக்க முடியாத கறையாகவும் அமைந்து விடும்.

ஆகவே, சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்கள் பதவிகளை அவர்களாகவே முன்வந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினாமா செய்யவில்லையென்றால் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள், அமைச்சர் திரு விஜயபாஸ்கரையும், தமிழ்நாடு டி.ஜி.பி. திரு டி.கே. ராஜேந்திரனையும் எவ்வித காலதாமதமுமின்றி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்வு தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது. அரசியல் சட்ட அமைப்புகள் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு வாளாவிருந்தால், சம்பந்தப்பட்டவர்களை சரித்திரம் மன்னிக்காது!
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...