???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   17 , 2018  22:06:18 IST

குட்கா ஊழல் முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மற்றொரு உதவியாளர் வீடு உட்பட சென்னையில் 3 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.
 
குட்கா ஊழல் தொடர்பாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருடைய உதவியாளர் சரவணன் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து 3-நாளாக நடந்த விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், விஜயபாஸ்கரின் மற்றொரு உதவியாளரான சீனிவாசனின் வீடு உட்பட சென்னையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
 
இதேபோல, குட்கா வழக்கில் ஜாமினில் வெளிவந்த ஒருவருக்காக ஆஜரான வழக்கறிஞர் வேலுகார்த்திகேயனுக்கு சொந்தமான தஞ்சை வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். மேலும், இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...