???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   08 , 2019  21:54:49 IST

தமிழகத்தை குட்டிச் சுவராக்கிய திராவிடம் அழிந்து வருவதாகவும், ஆன்மீகம் தழைத்தோங்குவதாகவும் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற துக்ளக் பொன்விழாவில் பேசிய குருமூர்த்தி. சசிகலா ஆட்சி அமைக்கவுள்ளார் என கேள்விப்பட்டு உடனடியாக துக்ளக்கின் பொறுப்பை ஏற்க முன்வந்ததாக தெரிவித்தார்.

துக்ளக் விற்பனை அதிகரிக்க சோவுக்கு கருணாநிதி காரணமாக இருந்ததுபோல் தனக்கு சசிகலாதான் விற்பனைப் பிரிவு மேலாளர் என்றும் குருமூர்த்தி கூறினார். தமிழகத்துக்கு கலாசார காயம் ஏற்பட்டுள்ளதாகவும், காயம் ஆறும் வரை துக்ளக் இருக்கும் என்றும் குருமூர்த்தி கூறினார்.

தமிழகத்தை இரு கழகங்கள் குட்டிச்சுவராக்கியதாகவும் குற்றம் சாட்டிய குருமூர்த்தி, தமிழத்தி்ல் தற்போது திராவிட பாரம்பரிய அரசியலில் பெயரளவுக்குத்தான் இருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் எம்,ஜி.ஆர். என்றும் குருமூர்த்தி தெரிவித்தார் மேலும் நாட்டிலேயே தமிழர்கள்தான் நல்லவர்கள் என்றும் பாரதத்தை தமிழகம் தலைமையேற்று நடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...