???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   23 , 2019  23:02:24 IST

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் குஜராத்தில் கலவரம் வெடித்தது. இதில் அகமதாபாத்திற்கு அருகே ரந்திக்பூர் என்ற கிராமத்தில் கடந்த 2002 மார்ச் 3-ம்தேதி வன்முறை ஏற்பட்டது.

இதில் வன்முறையாளர்கள் கர்ப்பிணியான பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தனர். கலவரத்தின்போது பானோவின் குடும்பத்தினர் 14 பேர் உயிரிழந்தனர். பானோவின் 3 வயது குழந்தை சாலிஹாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, நீதிகேட்ட சட்டப் போராட்டத்தை பானோ தொடர்ந்தார்.

அவர் தொடர்ந்த வழக்கில் கடந்த 2008-ல் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், வன்முறைக்கு உடந்தையாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, பானோ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் 4 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.

இன்னொரு அதிகாரியான ஐ.பி.எஸ். ஆர்.எஸ். பகோரா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பானோ தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் பதில் அளித்த குஜராத் அரசு, ஓய்வுபெற்ற 4 காவல்துறை அதிகாரிகளுக்கு ஒய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறியது. பில்கிஸ் பானோ தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், பானோவுக்கு வீடு இல்லை என்றும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பில்கிஸ் பானோவுக்கு மாநில அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். அவருக்கு அரசு வேலையும், தங்கும் இடமும் அமைத்துத் தர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...