???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு 0 பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் 0 பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் 0 நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் 0 ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு! 0 திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை 0 வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு! 0 மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் 0 பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது! 0 அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு! 0 எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து 0 ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம்! 0 அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! 0 மீன்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி உயராது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   26 , 2017  04:55:44 IST


Andhimazhai Image

சரக்குகள் மற்றும் சேவை வரியால் (ஜிஎஸ்டி) விலைவாசி உயராது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்தார்.

 

சென்னையில் பாஜக சார்பில் ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

 

ஒவ்வொரு பொருளுக்கான வரிவிகிதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்தான் நிர்ணயிக்கப்பட் டது. ஜிஎஸ்டி கவுன்சில் என்பது அரசியல் சட்டம் சார்ந்த ஓர் அமைப்பாகும். இந்த கவுன்சிலின் உறுப்பினராக தமிழக நிதியமைச்சர் உள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் கலந்துகொண்டு ஒப்புதல் கொடுத்த பிறகே வரிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக சட்டசபையில் ஜிஎஸ்டிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு தமிழக அரசைப் பாராட்டுகிறேன்.

 

ஜிஎஸ்டி விஷயத்தில் மத்திய அரசுக்கு எந்த அளவுக்கு பொறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது.

 

ஜிஎஸ்டியில், புதிய வரி விதிக்கவில்லை. இருக்கின்ற வரியும் குறைந்திருக்கிறதே தவிர, அதிகமாக இல்லை. ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை வியாபாரம் செய்வோருக்கு வரி கிடையாது. இதுவரை கணக்குகளை நோட்டுகளில் எழுதி அதைக்கொண்டு வரி செலுத்தியவர்கள், இனிமேல் கணினியில் கணக்குகளைப் பதிவு செய்து, அதன்மூலமே வரி செலுத்தி, அதற்கான ரசீதையும் பெற்றுக்கொள்ளலாம். வணிக வரி அலுவலர் உங்களைத் தொந்தரவு செய்து பணம் எடுத்துச் செல்லும் நிலைமை மாறிவிடும். லஞ்சம் எங்கும் இருக்கக்கூடாது என்பதற்காகவே ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுகிறது.

 

வரி கட்டக் கூடியவர்கள் வரி கட்டுங்கள். வரி செலுத்த முடியாத வர்கள் மீது வரி விதிக்கப்பட வில்லை. ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு விலைவாசி நிச்சயமாக உய ராது. எனவே, நாட்டின் முன்னேற் றத்தைக் கருத்தில் கொண்டு ஜிஎஸ்டியை அமல்படுத்த அனை வரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...