???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்! 0 விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு 0 தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு 0 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் 0 தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்! 0 காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு! 0 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி 0 ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை! 0 அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி! 0 கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது அதிக எடைகொண்ட ஜிசாட்-11

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   04 , 2018  22:41:00 IST

இந்தியாவின் அதிக எடைகொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோள் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது அதிவேக இணைய சேவை வழங்க பயன்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்காக பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த வரிசையில், அதிவேக இணையதள சேவைகளை வழங்குவதற்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். இந்த செயற்கைக்கோள் கடந்த மே மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்-8 ராக்கெட் மூலம் மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைகோள் கண்காணிப்பு வளையத்தில் இருந்து பிரிந்து போனது.
 
இதையடுத்து, ஜூன் மாதத்தில் விண்ணில் ஏவப்பட இருந்த ஜிசாட்-11 செயற்கைக்கோளை தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் இருந்து திரும்பப் பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள், அதில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கருவிகளையும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்தனர்.
 
இதைத் தொடர்ந்து, பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன்ஸ்பேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட் 11 செயற்கைக்கோள் இன்று அதிகாலை 2:07 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அத்துடன், தென்கொரியாவின் புவி ஆய்வு செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 5,854 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், இஸ்ரோ இதுவரை தயாரித்த செயற்கைக்கோள்களில் அதிக எடைகொண்டதாகும். இதன்மூலம், இந்தியாவின் நிலப்பகுதியிலும், அருகில் உள்ள தீவுகளிலும் இணையதள வேகம் அதிகரிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். விநாடிக்கு 16 ஜிகாபைட் என்ற வேகத்தில் டேடா-வை வழங்க முடியும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
செயற்கைக்கோள் ஏவுவதை பிரெஞ்ச் கயானாவில் நேரில் பார்வையிட்ட இஸ்ரோ தலைவர் சிவன், ஜிசாட்-11 விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்த ஆண்டில் ஜிசாட்-20 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் சிவன் கூறினார்.
 
ஏற்கனவே ஏவப்பட்ட ஜிசாட்-19, 29 ஆகிய இரண்டு செயற்கைக்கோள்கள், தற்போது செலுத்தப்பட்டுள்ள ஜிசாட்-11 மற்றும் அடுத்தாண்டு ஏவப்படும் ஜிசாட்-20 செயற்கைகோள் ஆகியவற்றின் மூலம் விநாடிக்கு 100 ஜிகாபைட் வேகத்தில் இணையதள சேவையை வழங்க முடியும் என்றும் கே.சிவன் குறிப்பிட்டுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...