???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குரூப-4 தேர்வில் முறைகேடு: 35 பேரிடம் விசாரணை

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   13 , 2020  20:35:15 IST

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குரூப் - 4 தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் மாதம் 12-ந்தேதி வெளியாயின. இதைத்தொடர்ந்து, தேர்வில் தேர்ச்சி பெற்ற 12 லட்சத்து 76 ஆயிரத்து 108 பேரின் தரவரிசை பட்டியலை டி.என்.பி. எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டது.

இந்த பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றவர்களில் 40 பேர் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதி இருப்பதாகவும், இதனால் தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மேலும், அந்த 40 பேர் பட்டியலில் உள்ளவர்கள் தான் இட ஒதுக்கீடு தரவரிசை பட்டியலிலும், மாநில அளவில் முதல் 5 இடங்களை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி. (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) நிர்வாகம் முடிவு செய்தது. முதற்கட்டமாக ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அடுத்த கட்டமாக ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 13-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, அந்த மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 35 பேருக்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் 35 பேரிடம் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அவர்களுடைய திறமையை பரிசோதிக்க தகுதித்தேர்வும் நடத்தப்பட்டது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...