???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   24 , 2020  21:14:17 IST

குரூப்-4 தேர்வை அழியும் மையால் எழுதி முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மாபெரும் மோசடி தொடர்பாக 3 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 2 தாசில்தார்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கைதானவர்களில் 2 இடைத்தரகர்கள் அரசு ஊழியர்கள் ஆவார்கள். அவர்களில் ஒருவர் பெயர் ரமேஷ் (வயது 39). இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்ககத்தில் (டி.பி.ஐ.) அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

மற்றொருவர் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற்று எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரியும் மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன் (35) ஆவார்.

3-வது நபர் தற்போது முறைகேடு நடந்த குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர் ஆவார். அவருடைய பெயர் நிதீஷ் குமார் (21). இவர்களில் ரமேசும், நிதீஷ்குமாரும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர்கள். கைதானவர்கள் மீது 14 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...