செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
இன்று குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு!
தமிழகம் முழுவதும் குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடக்கிறது. சென்னை, குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளில் உள்ள…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
இன்று குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு!
Posted : சனிக்கிழமை, மே 21 , 2022 08:06:28 IST
தமிழகம் முழுவதும் குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடக்கிறது. சென்னை, குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளில் உள்ள 5 ஆயிரத்து 529 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. அதன்படி, இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பே ர் விண்ணப்பித்து இருந்தனர். அதன்படி, இந்த பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று (சனிக்கிழமை ) நடைபெற இருக்கிறது.
காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடக்கிறது. 200 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்பட்டு, 300மதிப்பெண்ணுக்கு தேர்வு கணக்கிடப்படும். இந்த தே ர்வுக்கு தே ர்வர்கள் காலை 8.59 மணிக்குள் தேர்வு அறைக்குள் வரவும், அதற்கு மேல் வருபவர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தி இருக்கிறது. மேலும், ஹால்டிக்கெட் மற்றும் அடையாள அட்டையையும் தேர்வர்கள் கையில் கண்டிப்பாக எடுத்து வர அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
|