???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு! 0 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு: ராணுவ தளபதி 0 துரைமுருகனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி 0 காங்கிரஸ் விலகினால் கவலையில்லை: துரைமுருகன் அதிரடி 0 “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”: ‘மைக்ரோசாப்ட்’ CEO நாதெள்ளா கருத்து 0 இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் CAA எதிர்ப்பு போராட்டம் 0 ”நூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள்”
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நதிகளை தூய்மைப்படுத்த பசுமைத் தீர்ப்பாயம் காலக்கெடு

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   11 , 2019  21:41:11 IST

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் 2018-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் இந்தியா முழுவதும் உள்ள 28 மாநிலங்களில் 351 நதிகள் மோசமாக மாசடைந்துள்ளதாக தெரியவந்தது.

அதில் தமிழகத்தில் காவேரி, திருமணிமுத்தாறு, தாமிரபரணி, சிறுமுகை வசிஷ்டா, சரபங்கா ஆகிய நதிகள் 380 கிலோமீட்டர் தூரம் மாசடைந்துள்ளன.

காவேரி ஆறு மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரையிலான 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாசடைந்திருப்பதாகவும், தாமிரபரணி ஆறு பாப்பான்குளம் முதல் ஆறுமுகநேரி வரையிலான 80 கிலோமீட்டர் தூரம் மாசடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், பவானி ஆறு சிறுவாணி முதல் காளிங்கராயன் வரையிலான 60 கிலோமீட்டர் தூரத்திற்கு மாசடைந்துள்ளதாகவும், சரபங்கா ஆறு சேலம் மாவட்டம் தாத்தியம்பட்டி முதல் கோனபாடி வரையிலான 15 கிலோமீட்டர் தூரத்திற்கும், திருமணிமுத்தாறு சேலம் முதல் பாப்பாரப்பட்டி வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்திற்கும் வசிஷ்டா ஆறு சேலம் மாவட்டம் மணிவிழுந்தான் முதல் தியாகனூர் வரையிலான 10 தூரத்திற்கு மாசடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்தது. இதனைக் கருத்தில் கொண்டு 351 ஆறுகளிலும் கழிவு நீர் கலக்காமல் இருக்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கான செயல்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டதன் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து நதிகளையும் மறுசீரமைப்பதற்கான செயல்திட்டங்கள் தயாராகின.  தற்போது இந்த செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிர்ணயித்துள்ளது.

இதுதொடர்பாக உத்தரவிட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு, 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து மாசடைந்த நதிகளிலும் கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்காக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். தவறும் உள்ளாட்சி அமைப்புகள் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க கால தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் 5லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.

2021-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து நதிகளையும் மறுசீரமைப்பதற்கான செயல்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தவறும் உள்ளாட்சி அமைப்புகள் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க கால தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் 10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.

இந்தப் பணிகளை மாநில அளவில் தலைமைச் செயலாளரும் தேசிய அளவில் ஜல்சக்தி துறைச் செயலாளரும் கண்காணிக்க வேண்டும். மாதம் ஒருமுறை மத்திய அளவிலான கூட்டம் நடத்தப்பட வேண்டும். மறுசீரமைப்பு செயல்முறைகள் குறித்த மாதாந்திர அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாமதம் செய்யும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் இந்தப் பணிகளை கண்காணிப்பதற்காக ஒரு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறி வழக்கு நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...