???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை 0 கால்வாய் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 விமான போக்குவரத்து தொடங்கியது: முதல் நாளில் 630 விமானங்கள் ரத்து 0 தொழிலாளர் நல சட்டத்தில் சீர்திருத்தம் மட்டுமே செய்யப்படுகிறது: நிதி ஆயோக் துணைத்தலைவர் 0 தமிழகத்தில் 17,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு: மேலும் 805 பேர் பாதிப்பு 0 தமிழகம்-புதுவையில் ரம்ஜான் கொண்டாட்டம்: சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை! 0 வைரஸ் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை: உகான் வைராலஜி நிறுவனம் 0 தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடரும் அமைச்சர் பி.தங்கமணி தகவல் 0 உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும்: முதலமைச்சர் ரம்ஜான் வாழ்த்து! 0 ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியது 0 ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துக: அரசு வேண்டுகோள்

Posted : புதன்கிழமை,   மே   15 , 2019  00:39:48 IST

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என்று, குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர் மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, 556 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

இதன் மூலம் 4.23 கோடி பேர் பயன்பெறுகின்றனர். நாளொன்றுக்கு, தினமும் 214 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கும் வகையில் இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.தற்போது மழை குறைந்து விட்டதால், இந்தாண்டு சராசரியாக, 185 கோடி லிட்டர் குடிநீர் தினமும் வழங்கப்படுகிறது.

2018-ல் தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை, 960 மி.மீ., ஆகும். ஆனால், 811 மி.மீ., மழை மட்டுமே பெய்தது.அதேபோல, 2019 ஜனவரி முதல் மே வரை பெய்ய வேண்டிய சராசரி மழை, 108 மி.மீ., ஆகும். ஆனால், 34 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது.

இது, இயல்பு மழையை காட்டிலும், 69 சதவீதம் குறைவாகும்.எனவே, பொதுமக்கள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடிநீர் வாரிய சென்னை தலைமை அலுவலகத்தில், பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக, சிறப்பு குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், உடைப்புகள், வீணாகும் குடிநீர் பற்றி, 94458 02145 என்ற மொபைல் போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்று, குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...