???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல்

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   30 , 2020  23:28:32 IST

தமிழகத்தில் ஒரு மாதத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தினமும், அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாத தொடக்கத்தில் இருந்து, கிட்டத்தட்ட 1 மாத காலம் 35 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சார்பதிவாளர் அலுவலகங்களில் தான் அதிக சோதனை நடந்துள்ளது. 13 சார் பதிவாளர் அலுவலகங்கள் சோதனையை சந்தித்துள்ளது.
 
 வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல அலுவலகத்தில் அதிகபட்சமாக ரூ.33 லட்சத்து 73 ஆயிரம் கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் சிக்கியது.
 
வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல அதிகாரி பன்னீர்செல்வம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 450 பவுன் தங்க நகைகளும் 6½ கிலோ வெள்ளி பொருட்களும் அங்கு சிக்கியது.
 
சோதனை நடத்தப்பட்ட 35 அரசு அலுவலகங்களிலும் ரூ.4.12 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. சென்னையில் நீலாங்கரை, பம்மல், குன்றத்தூர், செங்குன்றம் ஆகிய இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. வில்லிவாக்கத்தில் உள்ள ஊரக வளர்ச்சி உதவி நிர்வாக பொறியாளர் அலுவலகம், அடையாறு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
 
தீபாவளியையொட்டி அரசு அலுவலகங்களில் வசூல் வேட்டை அதிகமாக இருக்கும் என்பதால் தொடர்ந்து சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு இயக்குனர் ஜெயந்த் முரளி உத்தரவிட்டுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...