???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு சுடிதாருடன் துப்பட்டா கட்டாயம்!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   01 , 2019  00:34:52 IST

அரசு அலுவலங்களில் பணிபுரியும் பெண்கள் சுடிதார் அணியும் போது துப்பட்டா கண்டிப்பாக அணிய வேண்டுமென தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் “அரசு அலுவலங்களில் பணி புரிந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் தூய்மையான ஆடைகளை அணிந்து வர வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார், சல்வார் கமிஸ் உள்ளிட்ட ஆடைகள் அணிந்து வரலாம். ஆனால் சுடிதார் மற்றும் சல்வார் கமிஷ் அணிந்து வரும் போது துப்பட்டா கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும்.

ஆண்கள் சதாரண பேண்ட், சட்டை அணிந்து பணிக்கு வரலாம். டீ-சார்டுடன் வருவதை தவிர்க்க வேண்டும். நீதிமன்ற விசாரணைக்கு செல்லும் ஆண்கள் கோட் அணிந்து செல்ல வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார் அணிந்து செல்லலாம். ஆனால் துப்பட்டா கண்டிப்பாக போட்டிருக்க வேண்டும்“ என கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...