???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பி.எஸ்.என்.எல்லுக்கு 4ஜி! மீளுமா இந்நிறுவனம்?

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   23 , 2019  09:25:02 IST


Andhimazhai Image
கடும் நஷ்டத்தில் இயங்கிவரும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்கவும், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. 
 
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களை சீரமைக்க ரூ 15,000 கோடி மதிப்புள்ள இறையாண்மை பத்திரங்கள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு வழங்கப்பட்ட 4 ஜி ஸ்பெக்ட்ரம் விலையில் தான் இப்போதும் ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட உள்ளது. பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் மூடப்படமாட்டாது என்றும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் துணை நிறுவனமாக எம்டிஎன்எல் செயல்படும் என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். 
 
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களின் சொத்துக்கள் மூலம் ரூ 38,000 கோடி வருகின்ற 4 வருடங்களில் திரட்டப்படும் என்றும் அவர் கூறினார். அத்துடன்   பிஎஸ்என்எல் ஊழியர்களில் விருப்ப ஓய்வு பெறுவோருக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படும்’ என்றும் அறிவித்தார். பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு லட்சத்து 63 ஆயிரம் ஊழியர்களையும், எம்டிஎன்எல் நிறுவனம் 22 ஆயிரம் ஊழியர்களையும் கொண்டது. பிஎஸ்என்எல் நிறுவனம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஊழியர்களுக்கு 1,200 கோடி சம்பள பாக்கி வைத்துள்ளது. 
 
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குநர் பி. கே.புர்வார், ''ஊழியர்கள் ஒவ்வொருவரின் சம்பளமும் தீபாவளிக்கு முன்பாகவே வழங்கப்படும். அதாவது 23 அல்லது 24ம் தேதிகளில் வழங்கப்படும். 4ஜி சேவை வழங்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம். முழு அளவில் 4ஜி சேவையை அளிக்க 12 முதல் 15 மாதங்கள் ஆகும்'' என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிஎஸ்என்எல், எம்டிஎஸ்எல் நிறுவனத்தை இணைக்கவும் , பிஎஸ்என்எல்-க்கு 4 ஜி உரிமம் வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து இந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. நடப்பாண்டில் அதன் நஷ்டம் 14,000 கோடி ரூபாயாக உள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...