செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்
ஜனவரி 4ஆம் தேதி சென்னையில் நடந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்
Posted : புதன்கிழமை, ஜனவரி 25 , 2023 11:03:59 IST
ஜனவரி 4ஆம் தேதி சென்னையில் நடந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றும்போது சில வார்த்தைகளை சேர்த்தும், சில வார்த்தைகளை தவிர்த்தும் படித்தார். இதற்கு எதிராக உடனடியாக முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிய பாதியிலேயே அவையிலிருந்து ஆளுநர் கிளம்பினார். தமிழ்நாடு சர்ச்சை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்க அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக திமுக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரை விமர்சித்து வருகின்றன.
இதனிடையே குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேநீர் விருந்தை புறக்கணித்துவிட்ட விசிக, ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது.
விசிகவைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன.
|