செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
தமிழகத்தில் மொழி திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி
கோவை பாரதியார் பல்கலை பழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தமிழில் வாழ்த்துகளை…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
தமிழகத்தில் மொழி திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி
Posted : வெள்ளிக்கிழமை, மே 13 , 2022 22:30:30 IST
கோவை பாரதியார் பல்கலை பழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தமிழில் வாழ்த்துகளை தெரிவித்தார். நமது நாடு புதிய நம்பிக்கையுடன் முன்னேறி சென்று கொண்டிருப்பதாக கூறினார்.
கடந்த 7 ஆண்டுகளில் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்றார். தமிழகம் பல்வேறு துறைகளில் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக கூறிய ஆளுநர், தமிழ் சிறப்பாக உயர்ந்த மொழி என குறிப்பிட்டார்.
பிற நாடுகளில் உள்ள பல்கலைகழகங்களில் தமிழ் இருக்கை அமைத்து இருப்பதைப் போல , இந்தியாவில் உள்ள பிற பல்கலைக் கழகங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என்றார். மத்திய அரசு தமிழத்தின் மீது மொழியை திணிப்பதாக சிலர் கூறுவதில், உண்மை இல்லை எனவும் ஆளுநர் ரவி கூறினார்.
புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். கோவை பாரதியார் பல்கலைத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.
|