???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பேராசிரியை மீதான புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   16 , 2018  23:26:20 IST

தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். 
 
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது குறித்த சந்தேகம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ மூலம் எழுப்பப்பட்டிருக்கிறது.
 
அந்த ஆடியோவில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பெயர் இடம்பெற்றதால், அதன் வேந்தர் என்ற அடிப்படையில், இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடைபெறும். இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் எவரும் தப்பிவிடக் கூடாது. பாரபட்சமின்றி நடவடிக்கை தேவை' என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...