???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு 0 பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் 0 பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் 0 நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் 0 ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு! 0 திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை 0 வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு! 0 மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் 0 பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது! 0 அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு! 0 எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து 0 ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம்! 0 அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! 0 மீன்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புதுவை ஆளுநர் முதல்வர் மோதல் உச்சகட்டம்.

Posted : சனிக்கிழமை,   ஜுன்   24 , 2017  01:13:59 IST


Andhimazhai Image

புதுவை மாநில முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் மோதல்போக்கு உச்சத்தில்  உள்ளது. ஆளுநர் தொடர்ந்து அரசுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் அவரது அதிகாரத்தைக் குறைக்க  கடந்த ஜூன் 16ஆம் தேதி புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமிக்கு உள்ள நிதி அதிகாரத்தை கிரண்பேடி திடீரென பறித்துள்ளார். ஆனால், இந்த உத்தரவைப் புதுவை தலைமைச் செயலாளர் மத்திய உள்துறையின் பார்வைக்கு அனுப்பி உள்ளார்.

 

இதுகுறித்து, நாராயணசாமி புதுவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “ஒருவருக்கு மத்திய அரசு கொடுத்த அதிகாரத்தை வைத்து அவர்கள் அடுத்தவர்களின் அதிகாரத்தைப் பறிக்க உரிமை இல்லை. ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக நான் உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி உள்ளேன். ஆளுநரின் உத்தரவு செல்லாது என்று தலைமைச் செயலாளரும் உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதினார். உள்துறை அமைச்சகம் எங்கள் கடிதங்களை ஏற்றுக்கொண்டது. ஆளுநர், முதலமைச்சருக்கென்று தனித்தனி நிதி அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு நேரடி அதிகாரம் இல்லாததால் எனக்குள்ள அதிகாரத்தில் தலையிடுகிறார்.

 

ஆளுநரின் உத்தரவு செல்லாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் எப்போதும்போல் நிதி நிர்வாகத்தை நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...