அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்-க்கு தமிழக அரசு உரிய பதவி வழங்க வேண்டும் - சகாயம்

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   29 , 2021  16:19:50 IST

நேர்மையும் திறமையும் மிகுந்த உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அதிகாரமற்ற பதவியில் கடந்த 9 ஆண்டு காலமாக இருப்பதாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உமாசங்கர் ஐ.ஏ.எஸ் 1990ஆம் ஆண்டு அணியை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அலுவலர். 9 ஆண்டுகளுக்கு மேலாக இவர் சென்னை ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையராக தொடர்கிறார். மேற்கண்ட பதவி ஐ.ஏ.எஸ் அலுவலருக்கான பதவி அல்ல. அது ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் அளவிலான பதவி. இந்திய ஆட்சிப் பணியில் கூடுதல் தலைமை செயலர் பதவியில் அமர்த்தி இவ்வளவு காலம் வைத்திருப்பது சரியான நடவடிக்கை அல்ல. நேர்மையும் திறமையும் மிகுந்த உமாசங்கர் அவர்களை 9 ஆண்டுகளாக அதிகாரம் இல்லாத தண்டனைக்கான பதவி என்று கருதக்கூடிய ஒரு பணியிடத்தில் கடந்த கால அரசு வைத்திருந்தது. இது நேர்மையில் தீவிரம் காட்டக் கூடிய அலுவலர்களை மட்டுப்படுத்தும் அரசியலாளரின் ஒரு உத்தியாகவே நான் கருதுகிறேன். இது போன்ற அதிகாரமற்ற பதவிகளில் ஒரு கால இடைவெளிக்கு முன்பு இவர் கடந்த காலத்தில் வைக்கப்பட்டது வருத்தத்திற்குரியது.” என தெரிவித்துள்ளவர், உமாசங்கரின் மக்கள் நல பணிகளையும் பட்டியலிட்டுள்ளார்.  


மேலும், “திறமையும், அனுபவமும் நேர்மையும் உடைய ஒரு உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அவர்களை மேற்கொண்ட பணியிலிருந்து விடுவித்து, அவரது அனுபவம் ஆற்றலுக்கு ஒப்ப வெகுமக்களுக்கு பணியாற்றுகின்ற வகையில் இவருக்கும் பதவி வழங்கிட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...