அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்சே!

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   02 , 2022  12:35:40 IST

கோத்தபய ராஜபக்சே நாளை இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், மிகப்பெரிய அளவிற்கு போராட்டம் நடைபெற்றது. போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினமா செய்தார். சிங்கப்பூரில் அவரது விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 11ஆம் தேதி தாய்லாந்துக்கு சென்றார்.

 
தலைநகர் பாங்காக்கில் உள்ள ஓட்டல் அறையில் தங்கியிருக்கும் அவரை பாதுகாப்பு காரணங்களுக்காக அறைக்குள்ளே இருக்கும்படி தாய்லாந்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் கோத்தபய ராஜபச்சே கடந்த மாதம் இறுதியில் இலங்கை திரும்புவார் என தகவல் வெளியானது. ஆனால் அவர் வந்தால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் திட்டமிட்டு இருந்ததாக தெரிய வந்தது. இதனால் அவர் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்தார்.

 
ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனா கட்சி தற்போதைய அதிபரான ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே நாளை இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...