???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   13 , 2020  21:26:40 IST

இந்தியாவில் ரூ.75,000 கோடியை கூகுள் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

கூகுள் நிறுவனம் இந்தியாவில் செயல்படுத்த உள்ள தனது திட்டங்களை அறிமுகம் செய்வதற்காக ஆண்டுதோறும் "கூகுள் ஃபார் இந்தியா' நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி காணொலி காட்சி மூலமாக திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது அந்த நிகழ்ச்சியில் இதுகுறித்து சுந்தர் பிச்சை வெளியிட்ட அறிவிப்பில்,"இந்தியாவை மின்னணுமயமாக்குவதற்காக செயல்படுத்தப்படவுள்ள திட்டத்துக்காக இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடியை கூகுள் முதலீடு செய்ய உள்ளது.

ஒவ்வொரு இந்தியருக்கும் அவரவரின் தாய்மொழியிலேயே மிகவும் எளிமையான முறையில் தகவல்களை கிடைக்கச் செய்வது, இந்தியாவின் தனித்துவமான தேவைக்கு ஏற்றார் போன்ற சேவைகள், புதிய தயாரிப்புகளை கட்டமைப்பது, வர்த்தக நடவடிக்கைகள் மின்னணுமயமாக உருமாறுவதற்கான வசதியை மேம்படுத்துவது, சுகாதாரம், கல்வி, வேளாண் துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது போன்றவை இந்த திட்டத்தில் அடங்கும்' என்று தெரிவித்தார்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியுடன் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை காணொலி மூலமாக உரையாடினார்.

அப்போது,  கூகுள் நிறுவனம் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள், முயற்சிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் சுந்தர் பிச்சை விளக்கினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...