அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கட்டா குஸ்தி: திரைவிமர்சனம்! 0 இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி அமல்படுத்துவதை நான் எதிர்க்கிறேன்: கிரண் ரிஜிஜு 0 தமிழகத்தில் அனைத்து கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை! 0 தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழையே பெய்யும்! 0 அறப்போர் இயக்கத்துக்கு எதிராக நீதிமன்ற படியேறிய எடப்பாடி பழனிசாமி 0 பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: ஆளுநர் விளக்கம் கேட்டு கடிதம் 0 வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்: தமிழக அரசு 0 மும்பையில் தென்கொரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை! 0 குஜராத் முதற்கட்ட தேர்தலில் 60.20% வாக்குப்பதிவு! 0 ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 21 மசோதாக்கள்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு 0 கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை டிபியாக வைத்து 40 லட்சம் ஏமாற்றிய பெண்! 0 பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து! ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து உலகசாதனை! 0 தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை! 0 'கடைமையை செய்யாமல் தேவையில்லாதவற்றை ஆளுநர் பேசுகிறார்' – கி.வீரமணி 0 ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்: கவர்னருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கூகுள் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   23 , 2022  10:55:17 IST

கூகுள் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், முகநூலின் மெட்டா, அமேசான் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் இடம்பெறவுள்ளது. செயல்பாடு திறன் குறைவாக உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அடுத்தாண்டு தொடக்கத்தில் புதிய செயல்திறன் மேலாண்மை திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம் குறைவான செயல்திறன் உள்ள ஊழியர்களைக் கண்டறிந்து அவர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் செயல்திறன் குறைவாக உள்ள 6 சதவிகிதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளனர். இதன்மூலம், சுமார் 10,000 பேர் வேலையிழக்க நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது.


 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...