???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புக்கெட்டுக்குப் போட்ட டிக்கெட்! - குட்வில் மோகன்

Posted : சனிக்கிழமை,   ஜுலை   21 , 2018  06:57:11 IST


Andhimazhai Image
தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு வெளிநாட்டில் படப்பிடிப்பா, கூப்பிடு குட்வில் மோகனை என்கிறார்கள். இதுவரைக்கும் 200க்கும் மேற்பட்ட படங்களின் வெளிநாட்டுப் படப்பிடிப்புகளை ஏற்பாடு செய்துகொடுத்திருக்கும் மோகன், சென்னைக் காரர். இருந்தும் தமிழ்ப்படங்களை விட அதிகமாக தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில்தான் இவர் அதிகம் பங்காற்றியிருக்கிறார். அவரிடம் வெளிநாட்டு ஷூட்டிங் பற்றிப் பேசினோம்.
 
 
"விமான நிலையத்தில் 90களின் ஆரம்பத்தில் வேலை பார்த்தேன். அப்போது திரைத்துறையினருடன் எனக்குப் பரிச்சயம் இருந்தது. அவசரத்துக்கு நான் அவர்களுக்கு டிக்கெட் போட்டுத் தருவேன். தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்றவர்களுடன் நல்ல நட்பு இருந்தது. அவர்களுக்கு வேண்டும்போது டிக்கெட்கள் போட்டுத்தருவேன். பின்னர் குட்வில் என்ற ட்ராவல் ஏஜென்சியில் பணியாற்றத் தொடங்கியபோது அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசுவோர் சங்கம் சார்பாக இங்கிருந்து ஆண்டுதோறும் நடிகர்களைக் கூட்டிச் செல்வார்கள்.  ஒரு வருசம் 60 பேருக்கு டிக்கெட் போட்டுக் கொடுத்தேன். அதில் ஒரு டிக்கெட்டுக்கு 15 ஆயிரம் ரூபா வரைக்கும் மிச்சம் பண்ணிகொடுத்தேன். அப்போ எல்லா ஏர்லைன்ஸ் காரங்களையும் எனக்குத் தெரியும். அதுதான் சினிமாவில் முதல் அனுபவம் எனக்கு என்ற்உ சொல்லலாம்!
 
 
அதன் பிறகுதான் வெளிநாட்டில் ஷூட்டிங் எடுக்க உதவி செய்யற வேலையையும் செய்யலாமேன்னு தோணிச்சு. அப்போது வேளிநாட்டு ஷூட்டிங் செல்ல தகவல்தொடர்பு அமைச்சகம், ரிசர்வ் வங்கி அனுமதி எல்லாம் பெற வேண்டி இருந்தது. இந்த அனுமதிக்காக முப்பாத்யிரம் ரூபா வரைக்கும் பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் வாங்கிட்டு இருந்தாங்க. ஆனால் அந்த அனுமதி இலவசமாகவே வழங்கப்படுவது. இது தெரிந்த நான் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் இந்த அனுமதி விஷயம் எல்லாம் இலவசமாகவே கிடைக்கிறது. நான் இந்த வெளிநாட்டு படப்பிடிப்பு ஏற்பாடெ செய்ய விரும்புகிறேன். எனக்கு வாய்ப்பு கொடுங்க என்று பாக்ஸ் அனுப்பினேன். ஆனாலும் ஆறேழு மாசம் எனக்கு போட்டியா செயல்பட்ட இதே பீல்டு காரங்க நிறைய தொல்லை கொடுத்தாங்க. வெளிநாடுன்னா உனக்கு என்னன்னு தெரியுமானு கேப்பாங்க.  அப்புறம் ஒரு படத்துக்கு ஆஸ்திரேலியா போக டிக்கெட் மட்டும் போட்டுக் கொடுத்தேன். தெலுங்கு சினிமாவில் எல்லோரையும் தெரிந்திருந்தாலும் எனக்கு முன் அனுபவம் இல்லாததால் எல்லோரும் யோசித்தாங்க. அப்பதான் இயக்குநர் கிருஷ்ணவம்சி இயக்கிய அந்தப்புரம் படத்துக்காக மொரிசியஸ் போறதுக்கு பட்ஜெட் போட்டுக்கொடுத்தேன்.  மற்றவங்க கொடுத்ததை விட ஏழு லட்சம் ரூபாய் குறைவாய் கொடுத்திருந்தேன். எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அங்க நீல வண்ண கடலில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள் எல்லோருக்கும் பிடித்துப் போய்விட்டது. அந்த படத்துக்கு ஜெமினி டி.வி-யும் தயாரிப்பாளர் என்பதால் அந்த தொலைக்காட்சியில் இந்த காட்சிகளை திரும்பத் திரும்பப் போட்டுக்காட்டி எல்லோரையும் திரும்பிப்பார்க்க வெச்சிட்டாங்க. 
 
 
அப்போதான்  இன்னொரு படத்துக்கு மலேசியா, தாய்லாந்தில் ஷூட்டிங் ப்ளான் பண்ணியிருக்காங்க. அதை ஏற்பாடு செய்யும் பொறுப்பேற்ற கே கேடி சிவராம் சாருக்கு உடல்நிலை சரியில்லை.  அவர் என்னைக் கூப்பிட்டு நீ இதைச் செஞ்சிடு என்று சொன்னார். நான் அதுவரை வெளிநாடே போனது இல்லை. இருந்தாலும் கொஞ்சம் தயக்கத்துடன் சரின்னு சொல்லிட்டேன். மலேசியாவுக்குப் போய் அங்க இருந்த அரசு திரைப்பட அலுவலகத்துக்கு நானும் தயாரிப்பாளரும் போனோம். அவங்ககிட்ட இப்படி சினிமா ஷூட்டிங் செய்ய ஏற்பாடு பண்ணித்தர்றவங்க எண்களைக் கேட்டோம். அவங்க கிட்டபேசி நாங்க தங்கியிருந்த ஓட்டலுக்கு வரச்சொன்னோம். அதில் ஒருவர் ஹாலிவுட் படங்களுக்கு பண்றவர். அவர் சொன்ன பட்ஜெட் ரொம்ப அதிகம். மூன்றாவதாக வந்தவர் சொன்ன பட்ஜெட் நல்லா இருந்தது. அவரையே ஒப்பந்தம் செய்துகொண்டோம். அவர் மூலமாக தாய்லாந்தில் தொடர்புகள் பிடித்து அப்படியே பாங்காக் போய் இறங்கினோம். எனக்கு சின்ன வயதில் ஜேம்ஸ்பாண்ட் நடித்த 'தி மேன் வித் த கோல்டன் கன்' படத்தில் வரும் தீவு பிடித்திருந்தது. அங்கே போகணும்னும் விசாரித்தோம். பாங்காக்லேர்ந்து விமானம் ஏறி ஒருமணி நேரம் பயணம் ஒரு கிராமத்தில் இறங்கி அங்கிருந்து கார்ல போகணும்னாங்க. அப்படிப் போய் நாங்க பார்த்த லொகேஷன் புக்கெட். அதப் பார்த்ததும் தயாரிப்பாளர் உற்சாகம் ஆயிட்டார். வந்து சொன்னதும் அந்த படத்தின் இயக்குநரும் ரொம்ப திருப்தி அடைந்தார், முதல் முதலா புக்கெட்டுக்குப் போய் படம் எடுத்தது நாங்கதான்! 
 
 
 
அந்த படம் முடிந்த கையோடு ஒரு தயாரிப்பாளர் கூப்பிட்டு  என்னோட மிருகராஜு  படம்  சிரஞ்சீவி நடிக்கிறார் அது பண்ணுங்க என்றார். அதில் ஹீரோயின் சிம்ரன். அந்த படம்  Ghost and the darkness ஆங்கிலப்படத்தைப் பார்த்து எடுக்கப்பட்டது.  தென்ஆப்பிரிக்காவில் எடுத்த படம். தயாரிப்பாளர் அதே காடு, அதே படத்தில் நடித்த சிங்கம்தான் வேண்டும் அதில் நடித்த துணை நடிகர்கள் குழுதான் வேண்டும் என்று சொல்லிவிட்டார். ஹாலிவுட் படத்தில் நடித்தசிங்கம் அல்லவா? அது மிகவும் பிஸியாக இருந்தது. அதன் நாட்கள் கிடைப்பது சிரமமாக இருந்தது. ஒருவழியாக அதை ஒப்பந்தம் செய்து கொடுத்து டர்பன் பக்கத்தில் அதே காட்டில் படப்பிடிப்பு நடக்கவும் ஏற்பாடு செய்துகொடுத்தேன். ஒன்றரை மாதம் அடர்ந்த காட்டில் படப்பிடிப்பு. படம் பிரமாதமாக வந்தது. படப்பிடிப்பில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமும்ஏற்பட்டது. சிரஞ்சீவி ஒரு மரத்தின் மீது உட்கார்ந்திருப்பார். சிங்கம் வந்து அவர் மீது தாவும். உயரமாகஇருப்பதால் தப்பிப்பார். ஒரு குறிப்பிட்ட உயரம் போது என்று தீர்மானிக்கப்பட்டு அவர் அமரவைக்கப்பட்டார். சண்டைப்பயிற்சியாளர் கடைசி நேரத்தில் இல்ல.. இல்ல.. இது ஆப்பிரிக்க சிங்கம். அதிக உயரம் தாவும். இப்போ ஒரு டம்மி வெச்சி தாவ விடுவோம் என்று சொல்லி செய்துபார்த்தார்கள். அதேமாதிரி சிங்கம் அந்த டம்மியை அடித்து வீழ்த்தி விட்டது. பிறகு சிரஞ்சீவி இன்னும் அதிகமான உயரத்தில் அமரவைக்கப்பட்டார். அதே சமயம் பாலகிருஷ்ணாவின் நரசிம்மராயுடு படத்துக்கும் கனடாவில் ஷூட்டிங் ஏற்பாடு செய்தேன். அப்போது தமிழில் பிரசாந்த் நடித்த அப்பு படமும் கிடைத்தது. இந்த  நான் பணியாற்றிய மூன்று படங்கள் அப்போது ஒன்றாக பொங்கல் சமயத்தில் வெளியாயின.
 
 
அதிலிருந்து நிறையப்படங்கள். அப்போதெல்லாம் வெளிநாடு போனால் பஸ்ஸில் பயணம் செய்துசாலையிலேயே படப்பிடிப்பு எடுத்துகொண்டு வருவார்கள். பேருந்து நிலையத்தில் நடனம் ஆடவாஅவ்வளவு தூரம் போகவேண்டும்? அதை மாற்றி நாடுகளுக்குள் இருக்கும் சிறப்பான இடங்களுக்குக்கூட்டிப்போய் படம் எடுக்க வைப்பதில் நான் கவனமாக இருந்தேன். ஐரோப்பாவில் ஆஸ்திரியாவுக்குமுதல் முதலில் நான் தான் கூப்பிட்டுப்போனேன். பொதுவாக எல்லாம் ஸ்விட்சர்லாந்துதான் செல்வார்கள். ஆஸ்திரியாவிலும் மிக அழகான பனிமலைகள் உள்ளன. அங்கு  மட்டும் 45 படங்களுக்கு படப்பிடிப்பு ஏற்பாடு செய்துள்ளேன்.
 
 
உலகில் எந்த நாடாக இருந்தாலும் பத்துநாள் இடைவெளி இருந்தால் போதும் படப்பிடிப்பை ஏற்பாடு செய்துவிடும் அளவில் எனக்கு இப்போது நண்பர்கள் உண்டு. எந்த நாட்டைப் பற்றிக்கேட்டாலும் ஒரு மணிநேரம் பேசும் அளவுக்குத் தெரிந்து வைத்துள்ளேன்.
 
 
தமிழில் பிரசாந்த் நடித்த அப்பு, குட்லக், விஜய் நடித்த திருப்பாச்சி போன்ற படங்களுக்கு வேலை பார்த்திருக்கிறேன். தமிழனாக இருந்தாலும் வேற்று மொழிப்படங்களில்தான் அதிகம்வேலைபார்த்துள்ளாயே என்று நண்பர்கள் கேட்பதுண்டு. ஆனால் நான் இங்கே யாரிடமும் போய் கேட்டது இல்லை. அதெல்லாம் தானாக அமைந்தது தான். தமிழில் படங்களில் குறிப்பாக அஜீத் படங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளது. 
 
 
என் பார்வையில் சினிமா படப்பிடிப்புக்கு சிறந்த 5 இடங்கள்:
 
 
1. டிரோல் (ஆஸ்திரியா)
 
2. தென் ஆப்பிரிக்கா டர்பன் அருகே உள்ள காடுகள்
 
3. கோல்ட் கோஸ்ட் ஆஸ்திரேலியா
 
4. புக்கெட் தாய்லாந்து
 
5. குயீன்ஸ்டவுன் நியூசிலாந்து
 
 
நான் இதுவரை படப்பிடிப்புக்குக் கூட்டிச்செல்லாத ஒரு இடம் அலாஸ்கா. நான் அங்கே சென்றுவந்துள்ளேன். நல்ல இடம். இதுவரை அங்கே படப்பிடிப்பு நடத்தும் வாய்ப்பு உருவாகவில்லை.
 
 
 
[சந்திப்பு : செல்வா. அந்திமழை மே 2018 இதழில் வெளியான நேர்காணல்.]


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...