???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரூபாயின் மதிப்பு உயர்வு: தங்கம் விலை குறைந்தது!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   07 , 2019  00:46:43 IST

தங்கம் விலை கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்தது. கடந்த மாதம் 24-ந் தேதி ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.640 அதிகரித்தது. அதன் பின்னரும் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே தான் சென்றது. கடந்த மாதம் 29-ந் தேதி பவுனுக்கு ரூ.240 குறைந்து, அதற்கு மறுநாளே மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கியது.

கடந்த 4-ந் தேதி காலையில் ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி, மாலையில் சற்று குறைந்தது. இருப்பினும் முந்தைய நாளைவிட விலை அதிகரித்து தான் இருந்தது. நேற்று முன்தினம் மட்டும் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 741-க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 928-க்கும் விற்பனை ஆனது.

நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.83-ம், பவுனுக்கு ரூ.664-ம் அதிரடியாக சரிந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 658-க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 264-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் கடந்த ஒரு வாரத்துக்கு பிறகு தங்கம் விலை குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...