???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய அரசைக் காப்பாற்றவே அதிமுக அவையை முடக்குகிறது: சமாஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு! 0 தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரத் தயார்: பாஜக பொதுச்செயலாளர்! 0 நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம்: மைத்ரேயன் 0 நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு இல்லை: சிவசேனா 0 காவிரி விவகாரத்தில் மார்ச் 29- ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்: ஓ.பன்னீர்செல்வம் 0 டீகேன்னா தினேஷ் கார்த்திக்... இறுதி பந்தில் அடித்த அந்த ஆறு! 0 மீண்டும் ரஷ்யாவின் அதிபராகிறார் விளாதிமீர் புடின்! 0 இலங்கையில் அவசரநிலைப் பிரகடனம் ரத்து : மைத்ரிபால சிறிசேனா 0 குரங்கணி தீ விபத்து: சட்டசபையில் இரங்கல் தீர்மானம்! 0 தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி: கி.வீரமணி 0 முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இந்தியா கோப்பையை வென்றது! 0 அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி! 0 தோல்வியடைந்தவர்களின் பேச்சாக ராகுல் காந்தியின் பேச்சு இருக்கிறது: நிர்மலா சீதாராமன் 0 பாஜகவில் இருந்து மோடியை நீக்கிவிட்டால் பாஜக கட்சியே இருக்காது: குஷ்பு 0 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அமமுக உண்ணாவிரத போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   09 , 2017  02:18:44 IST


Andhimazhai Image

பிப்ரவரி 27, 2002 அன்று அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி ரயிலை கோத்ரா ரயில் நிலையத்தின் அருகே வன்முறையாளர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். இதில், அந்த ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர். அதன் பிறகு குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த கலவரத்தில் சுமார் எழுநூறு பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

 

இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் 2011 ம் ஆண்டு பிப்ரவரி 22 ம் தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்பட்ட மௌலானா உமர்ஜி, கோத்ரா நகராட்சித் தலைவர் முகமது உசைன் கலோட்டா, முஹமது அன்சாரி மற்றும் உத்திர பிரதேச மாநிலம் கங்காபூரைச் சேர்ந்த நானுமியா சௌதாரி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். மேலும் சிறப்பு நீதிமன்றம் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும், 11 பேருக்கு மரண தண்டனையும் என 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை விதித்தது. தண்டனை வழங்கப்பட்ட இந்த 31 பேரும் இந்தியக் குற்றவியல் தண்டணைச் சட்டத்தின்படி கொலை, கொலை முயற்சி, குற்றவியல் சதி ஆகிய பிரிவின் தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பில்  சிறப்பு நீதிமன்றம் 11 பேருக்கு அளித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், 20 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது. மேலும் ரயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குஜராத் மாநில அரசு தலா பத்து லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

 

வரும் டிசம்பரில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...